தற்போதுள்ள அவசர உலகில் பலருக்கும் ஓய்வு என்பது மிக குறைவாக தான் கிடைக்கிறது. அதிக நேரம் நின்றபடி வேலை பார்ப்பது அமர்ந்தபடி வேலை பார்ப்பது உள்ளிட்டவை காரணமாக நமது கை மற்றும் கால்களில் ஏற்படும் வலி மிகவும் அதிகம்..
அப்படி நமக்கு ஏற்படும் வலியானது இரவில் நாம் தூங்க செல்லும் போது தான் தீவிரமடையும் கைகளிலும் கால்களிலும் ஏற்படும் குறைச்சல் நம்மை தூங்க விடாது அது போன்ற வலியால் அவதிப்படுவோருக்கான சில எளிய வீட்டு வைத்தியங்களை நாம் இப்பதிவில் காணப் போகிறோம். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த கை மற்றும் கால்களில் ஏற்படும் குடைச்சலுக்கு தீர்வு காண முடியும் அந்த வகையில் 100 கிராம் அளவிலான சீரகத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் எலுமிச்சை பழத்தின் சாற்றை சேர்த்து கலந்த விடவும் பின்னர் அதில் வெல்லம் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த கலவியினை ஒரு சிறிய புது பானையில் மாற்றிக்கொள்ளுங்கள் அதன் பின்னர் அதனை வெயிலில் போட்டு உலர வைக்கவும் இது இரண்டு அல்லது மூன்று நாட்களில் நன்றாக வெயிலில் காய வேண்டும் நன்றாக உலர்ந்த பிறகு அதனை எடுத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை தினமும் ஒரு ஸ்பூன் அளவில் காலை மற்றும் மாலை என்று இரு வேலை உட்கொள்ள வேண்டும் அப்படி நாம் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பட்சத்தில் இது கை கால் குடைச்சலுக்கு நல்ல தீர்வினை கொடுக்கும். குறிப்பாக பெண்கள் வீட்டில் இருக்கும் வேலைகளையும் பார்த்துக் கொண்டு வெளியிலும் வேலைக்கு சென்று வீடு திரும்புவதால் அவர்களுக்கு சீக்கிரத்திலேயே இந்த கை கால் வலி வந்து விடுகிறது மேலும் மூட்டு பகுதிகளும் பலவீனமடைந்து வலி அதிகரித்து அங்கே இங்கே நகரம் முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஓமம் விளங்கம் திப்பிலி சுக்கு மிளகு உள்ளிட்ட அனைத்தையும் தலா 10 கிராம் அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் இந்த பொடிகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக படித்து ஒரு கொள்கலனில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை நாம் தினமும் சிறிதளவு எடுத்து அதில் சர்க்கரை பாகு அல்லது தேனை இனிப்பிற்காக சேர்த்து சிறிதளவு உட்கொள்ள வேண்டும் மேலும் அதில் நெய் சேர்த்து லேகியம் பதத்திற்கு கலந்து விட்டு சாப்பிட்டு வர வேண்டும். தினமும் இதனை நாம் உட்கொண்டு வந்தால் கை மற்றும் கால்களில் ஏற்படும் குறைச்சலுக்கு நிச்சயம் நிவாரணம் கிடைக்கும் இவை அனைத்தும் இயற்கை பொருட்கள் என்பதால் நமக்கு எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது..!!