
கை கால்களில் சுளுக்கு ஏற்பட்டால் உடனே இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் எந்த விதமான உடல் ரீதியாக பிரச்சனை இருந்தாலும் வீட்டிலேயே இயற்கையான முறையில் சரிசெய்ய தான் பார்ப்பார்கள். சரியாகவில்லை என்றால் தான் மருத்துவரிடம் செல்வார்கள். ஆனால் இன்றைக்கு தலைவலிக்கு கூட மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெரும் நிலைக்கு வந்து விட்டோம். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே பல நோய்களை நாம் குணப்படுத்த முடியும் . இந்நிலையில் கை கால்களில் சுளுக்கு ஏற்பட்டால் வலி கடுமையாக இருக்கும். அப்போது உடனே நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கை மற்றும் கால்களில் சுளுக்கு ஏற்பட்டவர்கள் நீரில் கற்பூரம் மற்றும் சுக்கு மற்றும் மிளகு போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை துணியில் நனைத்து சுளுக்கு உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க சுளுக்கு நீங்கும். மேலும், தாளிக்க பயன்படுத்தப்படும் கடுகை நன்றாக பேஸ்ட் போல அரைத்து சுளுக்கு உள்ள இடத்தில் பற்று போட வலி முற்றிலுமாக குறையும்.