
கொசுக்களை தடுப்பதற்கான இயற்கையான முறைகள் என்னென்ன தெரியுமா..??
தற்போது அனைவரின் வீடுகளிலும் காணப்படும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை கொசு. இந்நிலையில் இயற்கையான முறையில் கொசுக்களை எவ்வாறு தடுக்கலாம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
வேப்பிலை எண்ணையை தேய்த்துக் கொள்வது அல்லது வேப்பிலை புகை செய்வது கொசுக்களை விரட்டுவதற்கும் மிகவும் உதவும். லெமன் கிராஸ் எண்ணெய் தண்ணீரில் கலந்து உடலில் தடவினால் கொசுக்கள் அணுகாமல் இருக்கும். கத்திரிக்காய் இலையை கொதிக்க வைத்து அதன் நீரை தேய்த்துக் கொள்வதன் மூலம் கொசுக்கள் நம்மிடம் வருவதை தடுக்கலாம். கொசுக்கடி ஏற்படும் அரிப்பு மற்றும் கொசுக்கடியால் ஏற்படும் சிவப்பு நீங்க அருகம்புல் சாற்றை தடவலாம். கொசுக்கடி ஏற்பட்ட இடத்தில் எலுமிச்சை சாறு தடவினால் சலிப்பு மற்றும் அரிப்பு போன்றவைகள் குறையும். பச்சை வெங்காயத்தை அரைத்து கொசுக்கடி ஏற்பட்ட இடத்தில் வைக்கலாம். ஒரு அறையில் கற்பூரத்தை வைத்து விட்டால் அதன் வாசனை கொசுக்களை விரட்டும். தினமும் மாலையில் சாம்பிராணி போடுவதன் மூலமும் கொசுக்களை விரட்ட முடியும். மஞ்சளில் ஆன்டிபயாட்டிக் அதிகம் இருப்பதால் அதை அரிப்பு வீக்கம் இருக்கும் பகுதிகளில் தடவலாம்.