கொடிக்கம்பம் நடும் போது மின்சாரம் தாக்கி தேமுதிக தொண்டர் பலி..!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நடுக்குப்பம் கிராமத்தில் மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சியின் கொடிக்கம்பம் நடும் பொழுது மின்சாரம் தாக்கி தேமுதிக தொண்டர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்த 5 பேர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.