தற்போது நடந்து முடிந்த சுதந்திர தின விழாவிற்கு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து நிறுவனங்களிலும் கொடியேற்றம் செய்யப்பட்டது. இந்த கொடியேற்றம் நிகழும்போது நேராகவும் சரியான முறையிலும் மற்றும் கிழிந்த கொடிகள் இல்லாமல் கொடியேற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியது. அதேபோல் அனைத்து இடங்களிலும் சிறப்பாக கொடியேற்றம் நடைபெற்று முடிந்தது.
இவ்வாறு நடைபெற்ற சுதந்திர தினத்தன்று, கேரளாவில் ஒரு பள்ளியில் கொடியேற்றம் செய்யும் போது நிகழ்ந்த ஒரு சம்பவம் மக்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, கொடியேற்றம் செய்யும் போது தேசியக்கொடி கொடிக்கம்பத்தின் ஒரு இடத்தில் சிக்கிக் கொண்டது. அப்போது ஒரு பறவை பறந்து வந்து அந்த சிக்கி இருந்த கொடியை விடுவித்து கொடியேற்றம் செய்ய உதவியது போல் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால், உண்மையில் அந்த கொடியேற்றம் நிகழும்போது அந்த பறவை பறந்து வந்து அந்த கொடிக்கம்பத்தின் பின் இருந்த தென்னை மரத்தில் உட்கார்ந்தது குறிப்பிடத்தக்கது. இது கேமரா ஆங்கிள் காரணமாக தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.