தமிழரின் கலாச்சார மற்றும் பண்பாட்டு உணவாக இட்லியை கூறுகின்றோம், இன்றைய காலங்களில் பலரும் இட்லியை விரும்பும் நிலையில் இட்லி தான் உடலுக்கு ஆரோக்கியம் என்று நம்மில் பலருக்கும் தெரியும்.
இன்றைய காலகட்டங்களில் இட்லி மாவு அரைத்து அதனை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்த பழக்கம் எல்லோருக்கும் உண்டு, ஒரு சிலர் இட்லி மாவு அரைத்து ஃப்ரிட்ஜில் ஒரு வாரம் முதல் ஒரு மாதம் காலம் வரை பயன்படுத்தி வருகின்றனர், அப்படி பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியமாக இருக்காது என்று மருத்துவர் கூறுகின்றனர், மேலும் வெகு நாட்களாக பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் இட்லி மாவானது ஒவ்வாமை, அல்சர் பிரச்சனை, குடல் பிரச்சனை, குமட்டல், கேன்சர் போன்ற நோய்களை உண்டு பண்ணும், இதனால் முடிந்தவரை ஃப்ரிட்ஜில் மாவை வைத்து மாதக்கணக்கில் பயன்படுத்துவதை விட இரண்டு நாட்களிலேயே பயன்படுத்திட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!