
தவெக கட்சியின் கொடியில் யானை சின்னம் பயன்படுத்தப்படுவதை தடை செய்ய கோரி பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கில், கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதி கோரி புதிய மனுவை பகுஜன் சமாஜ் கட்சி தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவைப் பொருத்து பதிலளிக்க, சென்னை உரிமையியல் நீதிமன்றம் தவெக கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.