• September 29, 2023

கொடுத்த கடனை திருப்பி செலுத்தாததால் கணவன் முன்பே மனைவி பாலியல் பலாத்காரம்..!!

மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில்  அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேரி உள்ளது. இம்தியாஸ் ஷேக் என்பவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு வட்டி இல்லாமல் ரூ 40,000 பணத்தை கடனாய் கொடுத்து உள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் கொடுக்கப்பட்ட இந்த கடன் தொகையை திருப்பித் தருமாறு ஷேக் பலமுறை வலியுறுத்தியுள்ளார். இருப்பினும் சில காரணங்களால் கடனை வாங்கியவர்களால் அதனை சரியான நேரத்திற்கு திரும்பி செலுத்த இயலவில்லை. இந்நிலையில் கணவன் மனைவி இருவரையும் அடியாட்கள் உதவியுடன் கடத்தி வந்து ஹதாப்சர் என்ற இடத்தில் உள்ள வீட்டில் தங்க வைத்தார். இருவரையும் சேக் கொடுமைப்படுத்திய நிலையில் கத்தியை காட்டி மிரட்டி உள்ளார்.

பணத்தை தராவிட்டால் அவரது மனைவி தனுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கடன் வாங்கியவர் .கூற அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து கத்தியை காட்டி மிரட்டிய சேக் கடன் வாங்கியவரின் மனைவியை அவரின் கண் முன்னே பாலியல் பலாத்காரம் செய்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இருவரும் ஹதாப்சர் காவல் நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று புகார் அளித்து உள்ளனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல் துறையினர் குற்றம் சாட்டப்பட்டுள்ள இம்தியாஸ் ஷேக்கை கைது செய்தனர்.

Read Previous

மணிப்பூர் 2 பெண்கள் நிர்வாணம் படுத்தப்பட்ட விவகாரம்..!! யாரையும் பாதுகாக்க வேண்டாம் என்கிறீர்களா..? உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி..!!

Read Next

கூட்டு பாலில் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட மூன்று சிறுமிகள்..!! இரண்டு பேர் கர்ப்பம்..!! குற்றவாளிகள் மாயம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular