காரைக்காலில் முன் விரோத தகராறு காரணமாக பக்கத்து வீட்டு சிறுவனின் மீது கொதிக்கும் கஞ்சியை வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரைக்கால் இந்திரா நகரை சார்ந்தவர் நவநீதன் அவரது மனைவி நதியா. இவர்கள் தனது வீட்டுக்கு முன்பு டிபன் கடை நடத்தி வருகின்றன இவர்களுக்கு நந்திதா என்ற மகளும் தருண் என்ற மகனும் உள்ளனர், நதியாவிற்கு பக்கத்து வீட்டை சார்ந்த காரைக்கால் அரசு மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரிந்து வரும் ஜோசப் மனைவி ராஜகுமாரிக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவ தினத்தன்று நதியா தனது கடையில் வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரது மகன் தருண் கடையில் உதவிக்காக நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ராஜாமேரி கொதிக்கும் சாதம் வடித்த கஞ்சியை தருண் மீது வீசிஉள்ளார். இதனால் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டு சிறுவன் அலரி துடித்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நதியா தட்டி கேட்டபோது அவரையும் ராஜ மேரி தாக்கி அவருக்கு கொலை மிரட்டல் விடத்துள்ளார், இதற்கிடையே வலியால் துடித்த சிறுவன் தருண் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார், இது குறித்து நதியா அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ராஜ மேரியை வலைவீசி தேடி வருகின்றனர்.