
கோயம்புத்தூரில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனியார் பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த சிறுமியின் தாயாரும் கைது செய்யப்பட்டிருப்பது அச்சத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் காங்கயம் பாளையத்தை சார்ந்தவர் மஞ்சுளா கணவரை பிரிந்து தாயுடன் வசித்து வரும் இவருக்கு 14 வயதுடைய மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் மஞ்சுளா விற்கும் சென்னையில் தனியார் பத்திரிக்கை ஒன்றில் பணியாற்றி வரும் பால் பிரவீன் என்பவருக்கும் இடையே நெருங்கிய பழக்கம் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு காங்கேயம் பாளையம் வந்துள்ள மஞ்சுளா உடன் தங்கியிருந்த பால் பிரவீன் வீட்டில் ஆளில்லாத நேரத்தில் மஞ்சுளாவின் மகளிடம் பாலியல் அத்துமிகளில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் பதறிய சிறுமி தனது பாட்டியிடம் இது பற்றி கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாட்டி சம்பவம் தொடர்பாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து விசாரணை நடத்திய காவல் துறையினக், நற்பிறவினை கைது செய்தன மேலும் இந்த பாலியல் சீண்டலில் அவருக்கு துணையாக இருந்த சிறுமியின் தாயார் மஞ்சுளாவையும் கைது செய்துள்ளனர். பின் இருவரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.