கொட்டும் மழையில் நண்பனை பார்க்க சென்ற வாலிபருக்கு நேர்ந்த சோகம்..!!

ஞானபிரகாசம் என்பவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் தேசாய் சந்து எனும் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன் வயது 27 என்ற மகன் இருக்கிறார். இவர் தனது ஐடிஐ படிப்பை முடித்துவிட்டு தந்தையின் மளிகை கடையிலேயே தந்தைக்கு உதவியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் விக்னேஸ்வரன் தனது நண்பனை பார்க்க பைக்கில் பிள்ளையார்பட்டி மேட்டிற்கு கடந்த 13ஆம் தேதி இரவு சென்றுள்ளார். அப்போது இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த விக்னேஸ்வரன் மீது அருந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்த மின்கம்பி எதிர்பாராத விதமாக உரசியதால் அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விக்னேஸ்வரன் இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து காவல்துறையிடம் புகார் செய்துள்ளனர். காவல்துறையினரும் இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்தப் பகுதியில் மிகவும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

உங்களை தீமைகளிலிருந்து பாதுகாக்கும் இரும்பு கவசமாக விளங்கும் விபூதி..!!

Read Next

என்னது.. பான் கார்டுக்கு ரூ.10000 அபராதமா??.. அதிர்ச்சியில் மக்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular