கொதிக்க வைத்த சோம்பு தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..??

கொதிக்க வைத்த சோம்பு தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..

சோம்பை தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து குடித்தால் செரிமான பிரச்சனையை மட்டுமல்லாமல் வாயு பிரச்சனைகளையும் நீக்கும். கொதிக்க வைத்த சோம்பு தண்ணீரை காலை மாலை என இரு வேலைகளிலும் பருகினால் முகத்தில் ஏற்படும் முகப்பருக்கள் கரும் புள்ளிகள் வயதான தோற்றம் நீங்கும்.

சோம்பு தண்ணீரை அடிக்கடி குடித்து வருவதால் வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழித்து புத்துணர்ச்சி மற்றும் தன்னம்பிக்கை கொடுக்கும். சோம்பு தண்ணீரை குடித்து வருவதால் மாதவிடாயின் போது ஏற்படும் வலி, அதனால் ஏற்படும் வயிறு உப்புசம் அனைத்தும் குணமாகிவிடும்.

சீரக தண்ணீரை போல சோம்பு தண்ணீரும் பசியுணர்வை கட்டுப்படுத்தி உடல் எடையை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க உதவும். சோம்பில் வைட்டமின் ஏ இருப்பதால் சோம்பு தண்ணீரை பருகி வருவதால் கண்களில் ஆரோக்கியம் மேம்படும். இன்சுலின் உற்பத்தியை கட்டுப்படுத்தும் முற்பொருள் சோம்பில் நிறைந்துள்ளதால் சோம்பு தண்ணீரை அடிக்கடி குடித்து வருவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சோம்பு தண்ணீர் மிகவும் நல்லது. சோம்பு தண்ணீரில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்டுகள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Read Previous

நெய் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா..?? கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு தான் இது..!!

Read Next

கோபத்தை குறைப்பதற்கான பத்து வழிகள் இதுதான்..!! கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular