கொதித்தெழுந்த நடிகை ராதிகா சரத்குமார்..!! ”ஏன்டா படுபாவி ஜெயிலுக்கு போய் நீ திருந்த மாட்டியா..?”

திமுகவில் உள்ள அடிமட்ட நிர்வாகிகள் முதல், அமைச்சர்கள் வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக கொண்டிருந்தாலும் கூட திமுகவில் அருவருக்கத்தக்க கருத்துக்கள் பொது மேடைகள் வெயில் பேசுவதையே வழக்கமாக கொண்ட சில பேச்சாளர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

சென்னையைச் சார்ந்த திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆபாசமாக பேசுவதில் கைதேர்ந்தவர்.  இவர் கடந்த ஆண்டு நடிகை குஷ்பு குறித்து ஆபாச முறையில் பேசியதற்காக கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின் திமுக தலைமைக்கு மன்னிப்பு கடித;ம எழுதி கொடுத்து அவர் மீண்டும் திமுகவில் இணைந்து கொண்டார். இந்த நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் தனது பாணியில் நடிகைக்கும் விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரையும், நடிகர் சரத்குமாரையும் ஆபாசமான வார்த்தைகளைக் கொண்டு விமர்சனம் செய்திருப்பது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியது அதனை பாஜக நிர்வாகி எக்ஸ் பக்கத்தில் பதிவிட அதனை ரீட்டிவீட் செய்த நடிகை ராதிகா சரத்குமார் ”ஏன்டா ஏண்டா படுபாவி ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா..? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வச்சிருக்காங்களே அவங்கள தான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்கரவர்த்தியேட  பேரு வேறு உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்க படனும் shame on #dmk@mkstalin@Udhaystalin disgraceful.” என திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை குறிப்பிட்டு கட்டணம் தெரிவித்துள்ளார்.

Read Previous

தேர்தல் முடிந்தவுடன் டிடிவி தினகரனை ஓரம் கட்டும் நரேந்திர மோடி..!! அமமுக-வினர் குமறல்..!!

Read Next

நர்மதை ஆற்றில் புனித நீராடிய ஏழு பேர் மாயம்..!! காவல்துறையினர் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular