
சுரக்காய் மற்றும் கொத்தவரங்காயில் கிடைக்கக்கூடிய அனைத்து மருத்துவ பலன்களையும் தெரிந்து கொண்டு அதனை வாரத்திற்கு இருமுறை சாப்பிட்டு வருவோம்..
கர்ப்பிணி பெண்கள் கொத்தவரங்காயை உண்பதன் மூலம் அவர்களது குழந்தை கருவில் நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகிறது. பிறப்பினால் ஏற்படும் பிரச்சனைகளை இதன் மருத்துவ குணம் குறைக்கிறது ஆகையால் இதை நிச்சயம் கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டும், கலோரி அளவுகளில் மிக குறைந்த உணவாக இருந்தாலும் வைட்டமின்களையும் மற்றும் தாதுகளையும் அதிகமாக கொண்டிருக்கும் உணவு இது ஆகையால் எடை குறைக்க விரும்புபவர்கள் கொத்தவரங்காயை உணவில் எடுத்துக் கொள்ளலாம், ரத்தசோகை இருப்பவர்கள் இதை சாப்பிடும்போது அதிக ரத்தம் சுரக்கும் இது ரத்த பற்றாக்குறையை நீக்கி உடலை நல்ல நிலைமைக்கு கொண்டு வருகிறது, கொத்தவரங்காயில் உள்ள நீர்ச்சத்து உடம்பில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது மேலும் அதிக அளவில் உள்ள புரத சத்துக்கள் கார்போஹைட்ரேடர்கள், தாதுக்கள் மற்றும் கரையக்கூடிய நாச்சத்துக்களையும் கொண்டிருப்பதால் கொத்தவரங்காய் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது, கொத்தவரங்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்தால் அது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும், சரும பிரச்சினைகளுக்கு மிகுந்த உதவி செய்கிறது கொத்தவரங்காய் இதில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட் சேதமடைந்த திசுக்களை சருமத்தில் இருந்து நீக்குவது இதனால் கரும்புள்ளிகள் பருக்கள் போன்றவை சருமத்தில் வளர்வதை தடுக்கிறது, சுரக்காயின் மகத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம் : சுரக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும் வெப்ப நோய்கள் எதுவும் அணுகாது, சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்தாக விளங்குகிறது, சுரக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும், சுரக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வை கொடுத்து உடலை வலுப்படுத்தும், பெண்களுக்கு உண்டாகும் சோகையை போக்கும் ரத்தத்தை சுத்தப்படுத்தும், குடல் புண்ணை ஆற்றும் தன்மை சுரக்காய்க்கு உள்ளது மூல நோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்தாகும், சுரக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும் சுரைக்காயை சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண் நோய் தீரும், சுரக்காயின் இலைகளை நீரிழித்து ஊறவைத்து அந்த நீரை பருகி வந்தால் வீக்கம் பெருவயிறு நீர்க்கட்டு நீங்கும் காமாலை நோய்க்கு பயன்படுத்தலாம்..!!