
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் குறித்த புதிய ஆய்வுகள் வெளியாகியுள்ளன. வுஹான் மீன் சந்தையில் விற்கப்படும் ரக்கூன் நாய்களின் மரபணுப் பொருட்களில் கோவிட்-ஐ உண்டாக்கும் சர்ஸ்கோவ்-2 வைரஸின் தடயங்கள் கண்டறியப்பட்டதாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கோவிட்-உருவாக்கும் கொரோனா வைரஸ் ஒரு ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப்படவில்லை, ஆனால் அது இயற்கையாகவே தோன்றியிருக்கலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். கொரோனா உறுமாறி பல்வேறு கட்டங்களாக கடந்த மூன்று ஆண்டுகளால் பல உயிர்களை பலி கொண்டுள்ளது. தற்போது, இன்புளுயன்சா எனப்படும் ஹெச்3என்2 என்ற வடிவத்தில் பரவி வருகிறது.