கொரோனா நோயாளிகள் – வழிகாட்டுதல்களை வெளியிட்ட எய்ம்ஸ்..!!

கொரோனா நோயாளிகள் தொடர்பாக வழிகாட்டுதல்களை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அதிகரித்து வரும் பாதிப்புகளை அடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கொரோனா வைரஸ் சந்தேகத்திற்குரிய அல்லது நேர்மறை பாதிப்புகளுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள OPD-யில் ஸ்கிரீனிங் பரிந்துரைக்கப்பட்டு, 12 படுக்கைகள் தீவிர நோய்வாய்ப்பட்ட கோவிட்-19 நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. கோவிட்-19 இன் JN1 மாறுபாட்டின் முதல் பாதிப்பு டெல்லியில் பதிவாகிய நேரத்தில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. சுவாச தொற்று, தொடர் இருமல், தொடர் காய்ச்சல் இருப்போருக்கு கோவிட் பரிசோதனை கட்டாயம். ஏற்கனவே மற்ற நோய் பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடமும் கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

Read Previous

கிருஷ்ணசாமி மருத்துவமனையில் அனுமதி..!!

Read Next

12 பேர் உயிருடன் எரிந்து பலியான பரிதாபம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular