கொலை எனக்கு புதிதல்ல… அதிமுக எம்எல்ஏ மீது புகார்..!!

கொலை செய்துவிடுவேன் என அதிமுக எம்எல்ஏ மிரட்டியதாக அதிமுக மாவட்ட கவுன்சிலர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். விருதுநகர் மாவட்ட அதிமுக கவுன்சிலர் கணேசன். இவர் அளித்துள்ள புகாரில், திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ-வான மான்ராஜின் மனைவி வசந்தி, மாவட்ட சேர்மனாக இருந்து வருகிறார். இவர் எனது வார்டு பணிகளுக்கு கடந்த 2 வருடங்களாக நிதி ஒதுக்கவில்லை. இதுகுறித்து நான் கேட்தற்கு, நேற்று எனக்கு போன் செய்து, ‘ஏற்கெனவே 2 பேரை கொன்று இருக்கிறேன். அதுபோல் உன்னையும் எரித்துக் கொலை செய்துவிடுவேன். கொலை செய்வது எனக்கு புதிதல்ல’ என மான்ராஜ் மிரட்டியதாக புகார் அளித்துள்ளார்.

Read Previous

இந்தியாவில் அதிகரிக்கும் ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு..!!

Read Next

மத்திய அரசை சாடிய எடப்பாடி பழனிசாமி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular