கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. ஐபிஎல் ஆரம்பத்தில் இருந்தே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இதுவரை மூன்று கோப்பைகளை கைப்பற்றிய ஒரு அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
இந்த அணியை பலர் முன்னெடுத்து சென்றாலும் கௌதம் கம்பீர் இந்த அணியின் தலைவனாக இருந்தபோது கொல்கத்தா அணி தனது பொற்காலத்தில் இருந்தது. மேலும் இந்த அணியின் உரிமையாளர் பாலிவுட் பிரபலம் ஷாருக்கான் என்று நாம் அனைவருக்கும் தெரியும்.
நேற்று நடந்து முடிந்த போட்டியில் ஹைதராபாத்திற்கு எதிராக 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி இதுவரை மொத்தமாக 20 போட்டிகளில் ஹைதராபாத்தை வென்றுள்ளது. இது மட்டும் இல்லாமல் பஞ்சாப் அணியை 21 போட்டியிலும் பெங்களூரு அணியை 20 போட்டிகளிலும் வென்று மூன்று அணிகளை 20 போட்டிக்கு மேல் வென்ற சாதனையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி படைத்துள்ளது.




