தமிழகத்தில் கொல்லிமலை அந்தியூர் ஏரி உட்பட மேம்படுத்தப்பட்ட ஏழு சுற்றுலா தளங்களை ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்…
தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் ரூபாய் 27.34 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட ஏழு சுற்றுலா தளங்களை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார் இது குறித்து தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று 26/11/2014 செயலகத்தில் சுற்றுலாத்துறை சார்பில் ஒகேனக்கல் அருவி பகுதிகள் கொல்லிமலை ஆண்டிபாளையம் ஏரி வத்தல்மலை முட்டம் கடற்கரை அந்தியூர் ஏரி மன்னார்குடி ஹரித்ரநதி கோயில் குளம் ஆகியவை 27 கோடியே 34 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார், தமிழ்நாட்டில் பல்வகையான சுற்றுலா தளங்கள் பழம்பெரும் திருக்கோயில்கள் இயற்கை எழில் கொஞ்சும் மலை மற்றும் வனப்பகுதிகள் அழகிய கடற்கரைகள் போன்ற பல்வேறு சுற்றுலா தளங்கள் பலதரப்பட்ட சுற்றுலா பயணிகளையும் கவரும் வகையில் அமைந்துள்ளது, இத்தகைய பெரும் வாய்ப்புகள் அடங்கிய சுற்றுலாத்துறை மேம்படுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது, அதன்படி சுற்றுலாத்துறை 2021 2022 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கான மாநில கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை செயல்படுத்திடும் வகையில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவி பகுதிகளை முழுமையான சுற்றுலா தளமாக மேம்படுத்திட ரூபாய் 17 கோடியே 57 லட்சம் 65 ஆயிரம் செலவில் நுழைவாயில் வளைவு கழிப்பறைகள் நுழைவு சீட்டு வழங்கும் இடம் உணவகம் படகு தளம் பார்வை மேடை மசாஜ் செய்யும் இடம் குளியலறை உடைமாற்றும் முறைகள் ஆழ்துளை கிணறு போன்ற முடிவூட்டும் மேம்பாட்டு பணிகள் செய்தது..!!!




