
சென்னையில் உள்ள 14 அமுதம் பல்பொருள் அங்காடிகள், ரேஷன் கடைகளில் நாளை முதல் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் தக்காளி கொள்முதல் விலைக்கு விற்பனை செய்ய உள்ளதாக இன்று அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, துவரம் பருப்பு அரை கிலோ 375க்கும், உளுத்தம் பருப்பு அரை கிலோ 560க்கும், தக்காளி ஒரு கிலோ 760க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த உணவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.