
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் ஆற்றிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. எனவே அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்கோபுரம் ஒன்று மண் அரிப்பால் தீடீரென சாய்ந்து நின்றது. அதனை தொடர்ந்து எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது என கூறப்படுகிறது.
மண் அரிப்பால் திடீரென சரிந்து விழுந்த மின் கோபுரத்தை சரிப்பார்க்கும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருந்த நிலையில் கயிறு ஒன்றை கட்டி பணியாளர் ஒருவரை அவ்விடத்திற்கு அனுப்ப மீட்பு குழுவினர் முடிவு செய்தனர். இந்நிலையில், கட்டிய கயிறு வலுவாக இல்லாத காரணத்தால், பாதியில் கயிறு முறிந்ததால் சரிப்பார்க்கும் பணியில் ஈடுப்பட்ட இளைஞர் ஆற்றில் தவறி விழுந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.