
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி ஓபிஏஸ், டிடிவி தினகரன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தேனியில் நடைபெறும் போராட்டத்தில் ஒரே மேடையில் ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் பங்கேற்றுள்ளனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பேசிய ஓபிஏஸ், “கொலை செய்தவர்கள், அதற்கு பின்னணியில் இருந்தவர்கள் யார் என்று நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். சம்பவம் நடந்த இரவு யார் மின் இணைப்பை துண்டித்தார்கள்? துண்டிக்கச் சொல்லி உத்தரவு பிறப்பித்தது யார்?” என ஓபிஎஸ் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.