கோடி கோடியாக சம்பாதிக்க தெரிந்திருக்க வேண்டிய தந்திரங்கள்..!! சாணக்கிய நீதியில் திரட்டப்பட்ட தகவல்..!!

பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.

இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.

சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.

இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.

சாணக்கியரின் கூற்றுப்படி, ஒருவர் அவருடைய வாழ்க்கையில் குறிப்பிட்ட சில விடயங்களை தெரிந்து கொண்டால் உயரங்களை அடைய முடியும் என கூறப்படுகின்றது.

அந்த வகையில் சீக்கிரம் பணக்காரர்கள் ஆக என்ன மாதிரியான தந்திரங்களையும், அறிவுரைகளையும் தெரிந்திருக்க வேண்டும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

சாணக்கியர் கூறும் தந்திரங்கள்

1. எப்போதும் அவர்களின் அறிவை வளர்த்து கொண்டே இருக்க வேண்டும். எந்த வேலை செய்யும் அனுபவமாக இருந்தாலும், ஒருபோதும் வீணாகாது. புத்திசாலிகளாக இருப்பவர்கள் வாழ்க்கையில் தோல்வியடைய மாட்டார் என சாணக்கியர் கூறுகிறார். மனிதனின் அறிவு என்பது எல்லா காலங்களிலும் அமிர்தமாக இருக்கும்.

2. ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, தன்னம்பிக்கை கொண்ட மனிதர்களை யாராலும் வெல்ல முடியாது. மாறாக தன்னம்பிக்கையான துணையுடன் இருப்பவர்களும் ஒருபோதும் தோல்வியடைய மாட்டார்கள். எப்பேர்ப்பட்ட கடினமான சூழ்நிலையிலும் வெற்றிக்கான பாதையை கண்டுபிடிப்பார்கள்.

3. உழைப்பில்லாமல் வாழ்க்கையில் வெற்றியடைய முடியாது. யார் என்ன சொன்னாலும் எப்போதும் கடின உழைப்பு இருக்க வேண்டும். சாணக்கியரின் கூற்றுப்படி, கடின உழைப்பே வெற்றியின் அடிப்படை மந்திரம் என்கிறார்.

4. உறக்கத்தில் இருந்தாலும் கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருக்க வேண்டும். வாழ்க்கையில் தோல்வியை சந்திக்க விரும்பாவிட்டால் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். தனது பணத்தை நன்கு பயன்படுத்த தெரிந்தவர்கள் சீக்கிரம் கோடீஸ்வரர்களாகிய விடுவார்கள்.

5. ஒருவர் தன்னுடைய தவறுகளை விட மற்றவர்களின் தவறுகளை கூர்ந்து கவனிப்பார்கள். இதிலிருந்து நமக்கு தேவையான பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் வெற்றிபெற விரும்பினால், மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து சிலவற்றை கற்றுக் கொள்ளவும். அனைத்து பாடங்களையும் உங்கள் வாழ்க்கையிலிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்தவொரு அவசியமும் இல்லை.

Read Previous

உங்களுக்கு சிறுநீர் கழித்த பின்பு எரிச்சல்?.. இந்த பாட்டி வைத்தியம் இருக்கே..!!

Read Next

தயிரை எப்போது எப்படி சாப்பிட வேண்டும்..?? கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular