கோடைகாலத்தில் உங்கள் குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்வது என்று தெரியுமா..!! பெற்றோர்களே, நிச்சயம் படிங்க..!!

xr:d:DAFkg5wfG5Y:11,j:5041045875105306799,t:23053119

கோடை காலம் ஆரம்பித்து வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே இருக்கிறது. என்னதான் அவ்வப்போது மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் குறைந்ததாக காணப்படவில்லை. இன்னும் கோடைகாலம் முடிய 40 நாட்களுக்கு மேல் இருப்பதினால் பல தாய்மார்கள் தங்களது குழந்தையை எப்படி பராமரிப்பது என்று தெரியாமல் அவஸ்தை படுகின்றனர். தங்களது குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்வது என்று இந்த பதிவில் காண்போம்.

கோடைகாலத்தில் குழந்தைகள் அதிக அளவு தண்ணீரை பருக வேண்டும். உங்கள் குழந்தை 10 கிலோவிற்கு இருந்தால் குறைந்தபட்சம் ஒரு லிட்டர் ஆவது தண்ணீர் குடிக்க வேண்டும். குழந்தைகளின் எடை அதிகமாக அதிகமாக தண்ணீரையும் அதிகமாக கொடுக்க வேண்டும். அதேபோல காய்கறிகள் பழங்களை சாப்பிடுவதற்கு முன்பு குறைந்தபட்சம் 10 நிமிடமாவது ஊறவைத்து கழுவி கொடுக்க வேண்டும்.

செயற்கை குளிர்பானங்களை கொடுக்காமல் மோர் நொங்கு எலுமிச்சை சாறு போன்றவற்றை கொடுக்க வேண்டும். மேலும் உடல் சூட்டை அதிகரிக்கும் சிக்கன் சாப்பிட விடாமல் மட்டன் மற்றும் மீன் போன்ற இறைச்சிகளை வழங்கலாம். துரித உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். உங்கள் குழந்தைகள் விளையாடிவிட்டு வந்தவுடன் கை கால்களை சுத்தம் செய்ய சொல்ல வேண்டும்.

இந்த விடுமுறையில் குழந்தைகள் அதிகமாக மொபைல் போனின் முன்பு அல்லது டிவியின் முன்போ தான் அதிகமாக உட்கார்ந்திருப்பார்கள். குழந்தைகளுக்கு அதை தவிர மற்ற விளையாட்டுகளை சொல்லிக் கொடுக்க வேண்டும். அதேபோல காலை மற்றும் மாலை நேரங்களில் இயற்கையை எவ்வாறு ரசிப்பது என்றும் சொல்லிக் கொடுக்க வேண்டும். இப்படி எல்லாம் செய்தால் இந்த கோடைகாலத்தில் உங்கள் குழந்தைகளுக்கு எந்த வித பிரச்சனைகளும் வராது.

Read Previous

வெண்டைக்காய் சாப்பிடுவதனால் இத்தனை நன்மைகளா..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

IPL 2025..!! விறுவிறுப்பான போட்டியில் வென்றது யார்..!! இந்த வருடத்தின் முதல் சூப்பர் ஓவர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular