
இந்த கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமாகவே இருக்கிறது. என்னதான் அவ்வப்போது மழை பெய்தாலும் மற்ற நேரங்களில் வெயில் அதிகமாக தான் இருக்கிறது. இதற்காக மக்கள் குளிர்பானங்களை அதிகமாக குடித்து வருகின்றனர். ஆனால் அது குடிப்பது சரியல்ல. இந்த வெயிலுக்கு எந்தெந்த பானங்களை குடிக்க வேண்டும் என்று இந்த பதிவில் காண்போம்.
மோர்: மோர் தயிரில் இருந்து கிடைக்கும் ஒரு பொருளாகும். இதை தினமும் காலையில் ஒரு கிளாஸ் குடித்து வந்தால் உங்களது உடல் குளிர்ச்சியாகவே நாள் முழுவதும் இருக்கும். வெயிலும் உங்களை எதுவும் செய்யாது.
இளநீர்: நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள முக்கிய பங்கு வகிக்கும் இந்த இளநீர். இதை மக்கள் பெரும்பாலும் குடித்துதான் வருகின்றனர். இதை குடிப்பதன் மூலம் நாள் முழுவதும் உங்களது உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
தர்பூசணி சாறு: தர்பூசணியில் நீர் சத்து வைட்டமின் சி மெக்னீசியம் போன்ற பல நன்மைகள் இருக்கின்றது. இதை குடித்தால் நாள் முழுவதும் நமது உடல் சூடாகாமலேயே இருக்கும்.
கிரீன் டீ: நமது உடல் குளிர்ச்சியாக இருக்கும் நேரத்தில் புத்துணர்ச்சியாகவும் இருக்க வேண்டும். தினமும் கிரீன் டீ குடித்து வந்தால் நமது உடல் புத்துணர்ச்சியாக இருக்கும்.
எலுமிச்சை சாறு: எலுமிச்சை சாறு ஒரு கிளாஸ் நீருடன் சேர்த்து ஜூஸாக குடிக்கலாம். அப்படி குடித்தால் இதில் இருக்கும் வைட்டமின் சி நம்மை நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.
மேலே குறிப்பிட்டுள்ள பானங்களை குடித்து கோடைகாலத்தில் உங்களது உடம்பை நீரேற்றமாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.