கோடைகால சரும கரும்புள்ளிகளை நீக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..!!

சம்மர் சீசன் தொடங்கினாலே சர்ம பிரச்சனைகளும் ஏற்படும், பெரும்பாலானோர் சம்மர் சீசனில் அனுபவிக்கும் பிரச்சனையாகும். ஆனால் அதை வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து சர்வ பிரச்சனையை சரி செய்து கொள்ள முடியும் அது குறித்து பதிவில் காண்போம்.

எலுமிச்சை சாறுடன் ,ரோஸ் வாட்டர் கலந்து காட்டன் துணியில் நனைத்து கரும்புள்ளி கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவிய பின் ஐந்து நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள் மறைந்து சருமம் அழகாக காட்சியளிக்கும்.

முகத்தில் எண்ணெய் தடவி வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து ஆவி பிடித்து முகத்தை கழுவி வந்தால் முகச் சுருக்கம் ஏற்படாது.மேலும் கரும்புள்ளிகள் ஏற்படுவதையும் இது தடுக்கின்றது.

மேலும் பப்பாளி பழத்தில் தோல் மற்றும் விதைகள் ஆகியவற்றை நீக்கி அதனுடன் தேன் கலந்து பிசைந்து முகத்தில் பூசி வருவதால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைகின்றது. மேலும் முகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகளை வெளியேற்றி முகம் அழகாக மாற உதவி செய்கிறது.

மேலும் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் ஜாதிக்காயை அரைத்து குழைத்து தொடர்ந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் பூசி வர கரும்புள்ளிகள் அடையாளம் இன்றி மறையும்.

Read Previous

சித்தர்களின் அபூர்வ மூலிகை தண்ணீர் விட்டான் கிழங்கு..!! இதை எப்படி பயன்படுத்தலாம்.?

Read Next

சோம்பேறித்தனத்தால், இப்படி எல்லாம் நடக்குமா..? தெரிந்து கொள்ளுங்கள்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular