
வாணலியில் சிறிது நெய் ஊற்றி கேரட் துருவலை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும். நன்கு வதங்கிய பின்னர் பால், கேசரி பொடி சேர்த்து கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் கால் கப் பால் சேர்த்து வெண்ணெய் மற்றும் பால் பொடி சேர்த்து கொதிக்க விட வேண்டும். இதில் ஏற்கனவே வதக்கி வைத்துள்ள கேரட் கலவையை போட்டு, நன்கு கலக்கி ஏலக்காய், வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சையை சேர்த்தால் சுவையான கேரட் கீர் ரெடி.