கோடையில் அடிக்கடி கீரைகளை சாப்ப்பிடுவதால் என்னாகும் தெரியுமா.?

கோடை காலம் வந்தாலே நாம் அன்றாட உணவில் என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. இதனால் சந்தைக்குச் சென்று ஏதாவது மலிவாக கிடைப்பதை பார்த்து வாங்கிக் கொண்டு வந்து விடுவோம். கோடை காலத்தில் நமது உடலில் நீர் சத்து குறைவதால் உடல் சோர்வு மற்றும் தலைவலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.

எனவே சந்தைக்கு செல்லும்போது கண்டிப்பாக கீரை வகைகளை அதிகப்படியாக வாங்கிக் கொண்டு வந்து சமைத்து சாப்பிடுவது நன்று. இது கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியை தருவது மட்டும் இன்றி நீர் சத்து குறைபாட்டால் ஏற்படும் தலைவலி, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளையும் நீக்க வல்லது. பச்சை நிறத்தில் உள்ள கீரைகளை அதிகப்படியாக எடுத்துக் கொள்வதால் நமது உடலில் கால்சியம், விட்டமின்ஸ் மற்றும் நார் சத்துக்கள் உள்ளிட்டவை கிடைக்கின்றன. கோடை காலத்தில் அதிகப்படியான வியர்வை வருவதால் நாம் நிறைய சத்துக்களை இழக்க நேரிடும். எனவே, அவற்றை மீட்டெடுக்க நமக்கு கீரை உணவு மிக முக்கியம்.

கோடை காலத்தில் அதிகப்படியான சோர்வு ஏற்படும். மேலும் மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும். இவற்றை தடுக்க தாதுக்கள், விட்டமின்கள் நிறைந்த கீரைகளை எடுக்கும்போது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உஷ்ணம் தாங்காமல் முடி கொட்டுவதை தடுக்கவும் இந்த கீரைகள் உதவுகின்றது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த கீரைகளில் உள்ள பொட்டாசியம் உதவி செய்கிறது.

இதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. விட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ உள்ள கீரைகளை எடுத்துக் கொள்ளும்போது நமது கண் பார்வையும் சர்ம பிரச்சனையும் மேம்படுகிறது. அன்றாடம் ஒரு கைப்பிடி அளவுக்கு கீரையாவது நம் உணவில் சேர்த்துக் கொள்ளும்போது நமது உடலில் ஆரோக்கியம் கெட்டுப்போகாமல் பார்த்துக் கொள்ளலாம்.

Read Previous

கரும்பு சாறை இவர்கள் சாப்பிட்டால் அவ்வளவு தான்..!! நினைத்து கூட பார்க்க வேண்டாம்.!!

Read Next

கறிவேப்பிலையை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன.? விபரம் இதோ.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular