
உடல் சூடு குறைய சில சிம்பிள் டிப்ஸ் கடும் உழைப்பு ஜுரம் தைராய்டு சுரப்பி அளவுக்கு அதிகமாக வேலை செய்தல் சில மருந்துகள் நரம்பு கோளாறுகள் ஆகியவை உடல் சூடு ஏற்பட காரணமாக அமைந்து விடுகின்றன. கோடை காலத்தில் உடல் சூடு என்பது ஒவ்வொருவரையும் வாட்டி வதைக்கும்.
ஒவ்வொருவருக்கும் உடல் சூடு வெவ்வேறு விதமான விளைவுகளை தெரியப்படுத்தும் சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் தலையில் பற்பலன்கள் முடி கொட்டுதல் கண் எரிச்சல் உடலில் அடி வயிறு வலித்தல், மலம் கழிக்கும் பொழுது சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடல் சூடு காண அறிகுறிகள் கண்டறிந்து குணப்படுத்துவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம். நல்லெண்ணையை தேய்த்து குளிக்கவும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதனை செய்யலாம் வாரந்தோறும் வாரத்தில் ஒரு நாள் தலையில் நல்லெண்ணெய் வைத்து சூடு போகும் அளவிற்கு தேய்க்க வேண்டும் அல்லது 15 நிமிடம் ஊற வைத்த நிலையில் தலையில் சீயக்காய் வைத்து நன்றாக தேய்த்து குளிக்கவும் இதனை செய்வதன் மூலம் உடல் சூடு குறைந்து காணப்படும் இதனை பாரந்தோறும் ஆண்கள் வெள்ளிக்கிழமையும் பெண்கள் சனிக்கிழமையும் குறிப்பாக குளிப்பார்கள். கோடைகாலத்தில் ஏற்படும் சூட்டை கட்டுப்படுத்துவதில் நுங்கு சிறந்த உணவுப் பொருளாகும் வெயில் காலத்தில் உடலில் வெப்பம் அதிகரிப்பதால் உடலுக்கு பல வகையான இன்னல்கள் நேரிடும். இதை குறைப்பதற்கு நுங்கு ஜூஸ் சாப்பிட வேண்டும். அது எப்படி செய்வது என்றால் நுங்கை தோல் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி குளிர்ந்த பாலில் சர்க்கரை ஏலக்காய் பொடி போட்டு கலந்து குடித்தால் குளிர்ச்சி தருவதோடு வைட்டமின் பி மற்றும் சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். பழைய சோறு சாப்பிடலாம் பழைய சோறு சாப்பிட்டால் உடல் உஷ்ணம் குறையும். அல்சர் சம்பந்தமான புண்களும் மெல்ல மெல்ல ஆற துவங்கி விடும் உடனடியாக உடலுக்கு குளிர்ச்சி தரும் ஒரு அற்புதமான உணவுதான் இந்த பழைய சோறு. கோடை காலத்தில் அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பழம் என்னவென்றால் அது வெள்ளரிக்காய் தான். வெள்ளரிக்காயில் 96 சதவீதம் நீர்ச்சத்து நிறைந்துள்ளது வெள்ளரிக்காய் கோடைகால சிறந்த உணவாக பார்க்கப்படுகிறது வெள்ளரிக்காய் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. தினமும் கோடைகாலத்தில் ஒரு டம்ளர் மோர் குடிப்பதன் மூலம் நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும். கற்றாழை ஜூஸ் இந்த கற்றாழை ஜூஸ் குடிப்பதன் மூலம் உடல் சூட்டை குறைக்கலாம். குறிப்பாக அனைவரும் வீட்டிலும் இந்த மண்பானை தண்ணீர் சேமித்து குடிப்பது மிகவும் நல்லது. ஒரு மண்பானையில் தண்ணீர் சேமிக்கப்படும்போது அது களிமண்ணில் உள்ள தாதுக்கள் உறிஞ்சி தண்ணீரின் சுவை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி உடல் சூட்டை தணிக்க மண்பானை தண்ணீரை விட சிறந்த பானம் வேற எதுவும் இல்லை.