
கோடை காலத்தை சமாளிப்பது எப்படி..!! கண்டிப்பா அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!
கோடை நம்மளை வாட்டி வதைக்கிறது என்றே சொல்லலாம். உங்கள் ஊரில் வெயில் எப்படி இருக்கிறது. கோடை காலத்தில் கோடையை எப்படி சமாளிப்பது என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம். கோடைகாலத்தில் அதிகாலை 5 மணிக்கு எழுந்து வெயில் வரும் முன்னே சமையல் வீட்டு வேலைகளை பெண்கள் முடித்து விடுவது மிகவும் நல்லது. உடலை இருக்காத வெண்ணிற பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மண்பானையில் வைத்த நீரை அருந்துவது மிகவும் நல்லது. அல்லது சாதாரண நீரே போதுமானது. அதுமட்டுமின்றி இந்த கோடை காலத்தை முன்னிட்டு உடலை வெப்பத்திலிருந்து தப்பிக்க இளநீர், பனை, நொங்கு போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம் உடல் வெப்பத்தை தடுத்து உடலுக்கு சக்தியை கொடுக்கும். அதுமட்டுமின்றி, ஆரஞ்சு சாத்துக்குடி, எலுமிச்சை, பழச்சாறு பதனி சாப்பிடலாம் தர்பூசணி பப்பாளி பழம் கூட சாப்பிடலாம். குடிநீரை கொதிக்க வைக்கும் போது அதன் சீரகம் கலந்து ஆரியபின் குடிநீராக அருந்தலாம். தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்தினால் உடல் சூடு குறைந்து சமநிலைப்படும். கோடையில் வெப்பத்தை தணிக்க மோரே ஒரு மிகப்பெரிய அருமருந்தாகும்.