கோடை வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை சாகுபடி..!! நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை..!!

கோடைகால வறட்சியினால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தோட்டக்கலை மற்றும் பயிர் தோட்டத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மரங்களின் எண்ணிக்கையை கண்டறிந்து கணக்கெடுப்பை தொடங்கியுள்ளனர்.

இது குறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.ஈஸ்வரன் அவர்கள் பேசுகையில் “தற்போதைய கோடை மழைக்கு முன் கடும் வெப்பம் நிலவியதாலும், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூரில் மட்டும் 15 ஆயிரம் மரங்கள் காய்ந்து உள்ளது. இதனால் நல்ல விளைச்சல் இல்லாததால் இழப்பீடாக 50,000 ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். மற்ற மரங்களுக்கு ரூ.35 ஆயிரம் ரூபாயும் இள மரங்களுக்கு ரூ.15 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். ஆனால் இதுவரை அரசு எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை முன் எடுக்கவில்லை”, என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் பேசிய அவர் “மேலும் மாவட்டத்தில் பூச்சி நோய் தாக்கிய 10,000 மரங்கள் உள்ளதால் கோவை விவசாயிகளுக்கு அரசு 14 கோடி நிவாரணம் அறிவித்தது, ஆனால் திருப்பூர் விவசாயிகளுக்கு எதுவும் இல்லை. கோவை விவசாயிகளுக்கான நிவாரண அறிவிப்பை நாங்கள் வரவேற்கின்றோம். அதே நேரத்தில் மற்ற மாவட்ட விவசாயிகளையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும்”, என்று கூறியுள்ளார் .

தோட்டக்கலை மற்றும் தோட்ட பயிர்கள் துறை அதிகாரிகள் கூறுகையில் “மாவட்டத்தில் வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை கணக்கெடுக்க கடந்த வாரம் அரசு எங்களுக்கு உத்தரவு பிறப்பித்தது, இதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக நாங்கள் தொகுதி வாரியாக வறட்சியின் காரணமாய் காய்ந்த தென்னை மரங்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகின்றது.

கணக்கெடுப்பின் முடிவில் பாதிக்கப்பட்ட மரங்களின் எண்ணிக்கையை அறிந்து அதற்குரிய பரிசீலனைக்கு பிறகு பாதிக்கப்பட்ட மரங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு குறித்து அரசு முடிவு செய்யும்”, என்று கூறி உள்ளனர்.

Read Previous

ஊருக்குள் சிறுத்தை புலி நடமாட்டம்..!! பொது மக்களுக்கு எச்சரிக்கை கொடுத்த வனத்துறையினர்..!!

Read Next

கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை அமோகம்..!! ரூ.1.5 கோடி அபராதம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular