கோடை வெப்பத்தில் கண் வலியால் அவதிப்படுகிறீர்களா.? இதோ உங்களுக்காக எளிய வீட்டு வைத்தியம்.!!

கோடை காலத்தில் நிலவும் கடுமையான வெப்பத்தால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று கண் வலி. அதிக சூட்டின் காரணமாக கண்கள் வறண்டு சிவந்து போகின்றது. கண்களில் எரிச்சல் இருப்பதோடு நீர் வடியும். இந்த பிரச்சனையை எளிய வீட்டு வைத்தியத்தின் மூலம் எவ்வாறு சரி செய்யலாம் என்பது குறித்து இக்கட்டுறையில் காணலாம்.

கண்கள் சிவந்து போகும் பிரச்சனைக்கு எளிய தீர்வு பாதிக்கப்பட்ட கண்களுக்கு கோல்ட் கம்ப்ரஸ்  பயன்படுத்துவதாகும். கோல்ட் கம்பரஸ் என்றால் எந்த வகையிலானது குளிர்ந்த  நீரை கொண்டு கண்களுக்கு ஒத்தடம் கொடுப்பதே. இதற்கு நீங்கள் சுத்தமாக இருக்கும் துவைத்த டவல் அல்லது துண்டை குளிர்ந்த நீரில் நினைத்து கண்களை மூடி சுமார் 10- 15 நிமிடங்கள் மெதுவாக ஒத்தடம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் கண்களை மூடி கண்களுக்கு மேலே ஈரத்துணியை போட்டு சிறிது நேரம் அப்படியே விட்டுவிடலாம்.

கண்களில் ஏற்படும் எரிச்சல் மற்றும் ரத்தம் சிவப்பை குறைக்க மற்றொரு பிரபலமான மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியம் வெள்ளரிக்காய் பயன்படுத்துவது. வெள்ளரிக்காயை எடுத்து மெல்லிய வட்ட வடிவ துண்டாக்கி கண்களை மூடி கண்களின் மேல் வெள்ளரிக்கா துண்டுகளை வைத்து 10- 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடலாம். இது கண்களில் ஏற்படும் எரிச்சலை குறைப்பதோடு கண்களுக்கு புத்துணர்ச்சியூட்டும்.

டீ பேக்ஸ் என்பவை ருசியான டி யை குடிப்பதற்கு மட்டுமல்ல, கண்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் சிவப்பை குறைக்கவும் உதவுகிறது, பிளாக் டீ பேக்சை சிறிது நேரம் வெந்நீரில் ஊற வைத்து விடுங்கள். சில நிமிடம் கழித்து ஆறிய பிறகு கண்களை மூடி கண்களுக்கு மேல் அந்த டீ பேக்ஸை சுமார் பத்து பதினைந்து நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள்.

கண்களுக்கு எக்ஸர்சைஸ் சோர்வு அல்லது நீண்ட ஸ்கிரீன் டைம் காரணமாக உங்களது கண்கள் பயங்கரமாக சிவந்து போனால் கண்களுக்கு ஓய் ஒழிக்கபிலிங்கிங்   எக்ஸர்சைஸ்களை  செய்ய வேய்டும்.கண்களை சில நொடிகள் வேகமாக சிமிட்டுவது, அதை தொடர்ந்து கண்களை திறப்பது மற்றும் பலமுறை இந்த பயிற்சியை மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம் கண் வலியால் ஏற்படும் சிகப்பு குறையும்.

Read Previous

கட்டிப்பிடிப்பதால் இவ்வுளவு நன்மைகளா..?அசத்தல் டிப்ஸ் இதோ.!!

Read Next

உணவை நீங்கள் அலுமினிய பாத்திரத்தில் சமைக்கிறீங்களா? ஆபத்து வேண்டாமே.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular