
Oplus_131072
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 2 கப்சர்க்கரை – 2 கப்முந்திரி – 1/2 கப்நெய் – ஒரு கப்ஏலக்காய் – 2 (தூள் செய்ய வேண்டும்)கலர் பொடி – தேவைக்கேற்ப
செய்முறை:
முந்தின நாள் இரவில் கோதுமை மாவை சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.அதனுடன் 3 கப் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.மறுநாள் காலையில் ஊற வைத்ததை நன்றாக பிசைந்து பாலை தனியாக வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து வடிகட்டிய பாலுடன் சர்க்கரையும் சேர்த்து நன்றாக கிளறவேண்டும்.கலர் பவுடர் சேர்த்து கிளறவும். அடிபிடிக்காமல் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவேண்டும்.பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்க அவ்வப்போது நெய்யை ஊற்றி கிளற வேண்டும்.நெய் கக்க ஆரம்பிக்கும் போது முந்திரி மற்றும் ஏலக்காய் பொடியும் போட்டு கிளறி ஹல்வா பதம் வந்ததும் இறக்கி பரிமாறவும்.