
❤️
கோதுமை இனிப்பு போண்டா செய்வது எப்படி ……
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு அரை கிலோ
சர்க்கரை அரை கிலோ
ஏலக்காய் 3 (பொடியாக்கியது)
உப்பு தேவைக்கேற்ப
சமையல் சோடா கால் டீஸ்பூன்
தேங்காய் துருவல் 1 கப்
வாழைப்பழம் 2 (சிறியது)
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சர்க்கரையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு ஏலக்காய், சமையல் சோடா, உப்பு போட்டு பிசையவும். இறுதியாக தேங்காய் துருவல், வாழைப்பழம் சேர்த்து அனைத்தையும் பிசைய வேண்டும். ஓரளவிற்கு கெட்டியாக இருக்குமாறு பிசைந்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்த மாவை சிறு சிறு உருண்டையாக பிடித்து எண்ணெயில் போட்டு பொன்னிறமானது எடுத்து விடவும்.