Oplus_131072
கோதுமை ரவை இட்லி செய்வது எப்படி…….
தேவையான பொருட்கள்
கோதுமை ரவை – 1கப்
கடலைப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
புளித்த தயிர் – 1 கப்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
பச்சைமிளகாய் – 1
கொத்தமல்லி – சிறிது
மிளகு – 1/4 டீஸ்பூன
செய்முறை
பச்சை மிளகாய், கொத்த மல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கோதுமை ரவையையும், கடலைப் பருப்பையும் 3 மணி நேரம் ஊற வைக்கவும். நன்கு ஊறியவுடன் இதனை மிக்ஸியில் போட்டு உப்பு, மிளகு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பின் பச்சைமிளகாய், கொத்தமல்லி, புளித்த தயிர், எண்ணெய் சேர்த்து 5 முதல் 10 நிமிடம் வரை புளிக்க வைக்கவும்.
இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொண்டு, இட்லி குக்கரில் இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுத்து கொத்தமல்லி சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.




