கோம்பு கழிவுநீர் பள்ளத்தில் மண் கொட்டி கசாப் கால்நடை வளர்ப்பு..!!

கோம்பு கழிவுநீர் பள்ளத்தில் மண் கொட்டி கசாப் கால்நடை வளர்ப்பு

குமாரபாளையத்தில் கோம்பு கழிவுநீர் பள்ளத்தில் மண் கொட்டி மேடாக்கி கசாப்க்கு  கால்நடை வளர்த்து வருகிறார்கள்.
குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் டாஸ்மாக் எதிரில் கழிவுநீர் பள்ளத்தில் மாடுகள், கன்று குட்டிகள் கட்டி வைக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன.  இதன் அருகில் மாட்டிறைச்சி கடையும் உள்ளது. மாடுகள் கட்டி வைக்கப்பட்ட இடம் மண் கொட்டப்பட்டு மேடாக ஆக்கப்பட்டுள்ளது. இதனால்  பள்ளத்தில் கழிவுநீர் செல்ல இடையூறு ஏற்படுகிறது. இதன் மறுபக்கம் கழிவுநீர் செல்லும் கோம்பு பள்ளத்தில் பொக்லின் மூலம் பல நாட்களாக குப்பைகள், மண் குவியல், இறைச்சி கழிவுகள், காய்கறி கழிவுகள்  அகற்றப்பட்டு வருகிறது. இந்த இடத்தில் கால்நடைகளையும், கொட்டப்பட்ட மண் குவியலையும்  அகற்றி கழிவுநீர் எளிதில் செல்லும்படி நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read Previous

பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு..!!

Read Next

சங்ககிரியில் எத்தனால் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஓட்டுநர் படுகாயம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular