இறைவனுக்குச் செய்யப்படும் பூஜைகளில் தீபம் காட்டுவதும், கற்பூரம் காண்பிப்பதும் உண்டு. தூபம் என்னும் உபசாரத்துக்கு அடுத்ததாக வரும் உபசாரம் நெய் தீபம் காட்டுதல், அதன் பின்னர் தேங்காய், பழங்கள் போன்ற பொருட்களை வைத்து நிவேதனம். பின் வெற்றிலை பாக்கு என்னும் தாம்பூலம் வைத்து உபசாரம். அதன் பிறகுதான் பக்தன் இறைவனின் திருமேனி முழுவதும் தரிசனம் செய்வதற்காகக் காண்பிக்கப்படும் (பச்சை) கற்பூரம் ஏற்றி காண்பிக்கும் கற்பூர உபசாரம்.