• September 24, 2023

கோயில் தேரோட்டத்தில் சம்பவம் செய்த 7 பெண்கள்..!! போலீசிடம் சிக்கினார்..!!

  • நெல்லை | கோயில் தேரோட்டத்தில் சம்பவம் செய்த 7 பெண்கள்! போலீசிடம் சிக்கியது எப்படி!

நெல்லை நகரம் ஆனித்தேரோட்ட திருவிழாவில் பங்கேற்ற இரண்டு முதியவர்களிடம் கொள்ளையடித்த 7 பெண்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பு.நெல்லை நகரம், நெல்லையப்பர் கோவிலில் நேற்று ஆனித்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அந்த தேரோட்ட விழாவில் பங்கேற்பதற்காக நேற்று பேட்டை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த மந்திரமூர்த்தி (வயது 56) என்பவர் பேருந்தில் நெல்லை நகரத்திற்கு சென்றார்.

அப்போது அவரது பாக்கெட்டில் இருந்த பணப்பையை நான்கு பெண்கள் திருடிய போது, அதனை சுதாரித்துக்கொண்ட அவர் உடனே கத்தி கூச்சலிட்டார். பின்னர் பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் கொள்ளையடித்த நான்குபெண்களையும் பிடித்து சந்திப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்திய போது, அவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த ஆஷா(வயது 37), திவ்யா(வயது 40), சுசீலா(வயது 47), லட்சுமி (வயது 20) என்பது தெரிய வந்தது.அதனை அடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து பணப்பையை மீட்டு மந்திர மூர்த்தியிடம் ஒப்படைத்தனர்.

இதே போல், சந்திப்பு உடையார்பட்டியில் இருந்து கோவிலுக்கு சென்ற ஆறுமுகம் என்பவரிடம், திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த முத்துமாரி, ஜெயந்தி, விஜயலட்சுமி ஆகிய 3 பெண்கள் பேருந்தில் பயணம் செய்தபோது ரூ.7000 கொள்ளை அடித்தனர்.

போலீசார் அவர்களையும் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் தேரோட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த இரண்டு முதியவர்களிடம் கொள்ளையடித்த 7 பெண்களை பிடித்து  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read Previous

ஏ.டி.எம். மையத்தில் ஒருவர் பணம் எடுக்க வந்தபோது பணம் வராததால்   ஆத்திரமடைந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த நபர்..!!

Read Next

தமிழகம் முழுவதும் இனி இது கட்டாயம்..! அமைச்சர் அன்புமணி அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular