
நீதி மன்ற வளாகத்தில் வைத்து பாஜக நிர்வாகி காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாணியம்பாடி சார்ந்த 38 வயதுடைய வினோத் குமார் என்பவர் பாஜக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராய் பணி புரிந்து வருகிறார்.ஐந்து ஆண்டுகளுக்கு முன் அடிதடி வழக்கில் வினோத் குமார் கைது செய்யப்பட்டு உள்ளார், இது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்து உள்ளது, இந்த வழக்கில் வினோத் குமார் நீதி மன்றத்திற்கு ஆஜராக வந்து உள்ளார்.
அப்போது காவல் உதவி ஆய்வாளர் ஜெகநாதனும் நீதி மன்றத்திற்கு வந்து உள்ளார் அப்பொழுது வினோத் குமார் காவல் உதவியாளர் ஜெகநாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்தம் சென்று உள்ளார். இதை தொடர்ந்து வினோத் உகுமார் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.