கோர விபத்தில் 3 பேர் பலி..!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அதிகாலையில் நடைபெற்ற கோர விபத்தில் மூன்று பேர் பலியாகினர். பேருந்து நிழற்கூடத்தில் வனவர் ரகுநாதன், ராஜன், செல்வகுமார் நின்றிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஜீப் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் நிழற்குடையின் கீழ் நின்றிருந்த 3 பேருமே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Read Previous

தமிழகம் முழுவதும் மருத்துவ முகாம்..!!

Read Next

காஞ்சிபுரம் எம்எல்ஏ வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular