கோர விபத்து..!! லாரியினுள் சொருகி நின்ற ஆம்னி பேருந்து.. சம்பவ இடத்திலேயே பலியான 2 டிரைவர்கள்..!! பரபரப்பு சம்பவம்.!!

சென்னையிலிருந்து நேற்று முன்தினம் பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த தனியார் ஆம்னி பேருந்து ஒன்று அறந்தாங்கி அருகே சென்று கொண்டிருந்தது, இந்த பேருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அது வேகமாக வந்து கொண்டிருந்தபோது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

இதனால் அந்த பேருந்து சென்டர் மீடியங்களில் மோதி தடுப்புகளை உடைத்துக் கொண்டு நான்கு வழிச்சாலையில் எதிர் திசையை நோக்கி சென்றுள்ளது. அப்பொழுது அதே நேரத்தில் எதிர் திசையில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த கண்டைனர் லாரி மீது ஆம்னி பேருந்து அதிவேகமாக சென்று நேருக்கு நேர் மோதியது.

இந்த கோர விபத்தில் ஆம்னி பேருந்து மற்றும் லாரி ஆகியவை அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் இந்த விபத்தில் டிரைவர்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாய் உடல் நசுங்கி உயிரிழந்தனர். பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். விபத்து ஏற்படுத்திய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்துள்ளனர், மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

ஏகாதசி விரதமும் அதனின் மகத்துவமும்..!!

Read Next

#Breaking: தென்மாவட்டங்களை புரட்டியெடுக்கும் அதிக கனமழை: வெள்ளத்தின் பிடியில் வீதிகள்.!! நீச்சலடிக்கும் இளசுகள்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular