
ஒருநாள் சீடன் ஒருவன் தன்னுடைய குருவிடம் சென்று சந்தோஷமாக வாழ என்ன செய்ய வேண்டும் குருவே என்ற கேள்வியை கேட்டானாம்.அதற்கு குரு சந்தோஷமாக வாழ்வது என்றால் என்ன உண்ண பொருத்தவரை என்ற கேள்வியை மறுபடியும் திருப்பி கேட்டாராம் சீடனிடம் அதற்கு சீடன் பதில் சொன்னானாம். உண்பதற்கு உணவு இருப்பதற்கு இடம் நல்ல வேலை பாதுகாப்பு இவைதான் மகிழ்ச்சி என்று இதைக்கேட்ட குரு அவனை அழைத்துக்கொண்டு ஒரு கோழி பண்ணைக்கு சென்றார். அங்கே கோழிகளை காண்பித்து கோழிகளுக்கு உண்ண உணவு இருக்க இடம் முட்டை போடும் வேலை. நாய் பூனை போன்றவற்றிடம் இருந்து பாதுகாப்பு ஆனால் இந்த கோழிகள் சந்தோஷமாக இருப்பதாய் நீ நினைக்கிறாயா என்று கேட்டாராம். இதற்கு சீடன் பதில் சொல்லாமல் நின்று கொண்டிருந்தானாம் சிறிது தூரம் தள்ளி சீடனை அழைத்துக்கொண்டு வந்து காண்பித்தாராம். அங்கே சில கோழிகள் சுதந்திரமாக உணவைத் தேடிக் கொண்டிருந்தனவாம். அதை காண்பித்து இந்த கோழிகள் உணவை தேடி சாப்பிடுகிறது பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கிறது. தங்குவதற்கு என்று இருப்பிடம் இல்லை ஆனால் சுதந்திரமாக மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த பண்ணையில் இருக்கும் கோழிகளுக்கு எல்லாம் கிடைத்தாலும் சுதந்திரம் என்பது இல்லை இப்படி வெளியே திரிந்து கொண்டிருக்கும் கோழிகள் உணவு பாதுகாப்பு போன்ற விஷயங்களுக்கு போராடினாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சொன்னாராம். சந்தோஷமாக வாழ்வது என்றால் நீ என்னிடம் கேட்ட கேள்விக்கு இதுதான் பதில் என்று அந்த பண்ணையில் உள்ள கோழிகளைப் போல பாதுகாப்பான ஆனால் சுதந்திரம் இல்லாத வாழ்வை தேர்ந்தெடுக்க போகிறாயா இல்லை ஆபத்துகளை எதிர் கொண்டு எல்லையற்ற சுதந்திரத்தை அனுபவிக்க போறாயா என்று கேட்டாராம் வெறுமனே உயிர் வாழ்வதனாலோ அடிப்படை தேவைகள் கிடைப்பதினாலோ சந்தோஷம் கிடையாது உண்மையான சந்தோசம் என்பது சுதந்திரமாகவும் ஆபத்தை எதிர்கொண்டும் வாழ்வில் நிச்சயமற்ற தன்மையை ஏற்றுக் கொள்ளும் தைரியத்திலும் தான் அடங்கியுள்ளது என்று கூறினாராம் குரு .