இன்றைய தலைமுறையினர் அதிகம் அசைவத்தையே விரும்புகின்றனர் அப்படி இருக்கும் பட்சத்தில் கோழிக்கறியின் மீது பலருக்கும் மோகம் அதிகம் கோழியில் பலவிதமான பெயர்களில் விதவிதமான வகையில் சுவை தரக்கூடிய தந்தூரி சிக்கன், பட்டர் சிக்கன் மற்றும் பள்ளிபாளையம் சிக்கன், சிக்கன் பிரைடு ரைஸ், சிக்கன் ரோல் உள்ளது..
மக்களின் பல்வேறான உணவுப் பட்டியலில் சிக்கனை முதலிடத்தில் உள்ளது அப்படி இருக்கும் பட்சத்தில் சிக்கன் வாங்கும் பொழுது இதனை அவசியம் கவனிக்க வேண்டும், நாளுக்கு நாள் கோழிக்கறியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் பட்சத்தில் அந்த கோழிக்கறி தரமானதா சுத்தமானதா என்று கவனிக்க வேண்டியது அவசியம், அதனை இப்படி கவனிக்கலாம் கோழிக்கறி கடையில் வாங்கும் பொழுது இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால் அது இன்று தான் வெட்டப்பட்ட கோழியாகவும் கோழியின் நிறமானது வெளிர்மஞ்சள் அல்லது சாம்பல் நிறத்தில் இருந்தால் அந்த கோழி ஆரோக்கியமற்ற கோழி கறியாகவும் இருக்கிறது என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும், ஆரோக்கியமான முறையில் கோழிக்கறிகளை வாங்கி சமைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது..!!