
ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி கோயிலுக்குள் தலை சீவக்கூடாது. கோயிலுக்குள் ஒரு முடி விழுந்தாலும் அது கடவுளின் கோபத்திற்கு நாம் ஆளாவோம் என்பதை குறிக்கும். அதனால் ஒருபோதும் கோயிலுக்குள் தலை சீவாதீர்கள். கடவுள் முன்பு நாம் அனைவரும் சமம் நம் சலுகையை காட்டி முந்தி செல்வதும் குறுக்கு வழியில் செல்வதும் தவறான செயலாகும் கோயிலுக்குள் செல்லும்போது மரப்பாச்சி பொம்மை வாங்கி வந்து வீட்டில் வைத்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் இதனால் செல்வம் பெருகும் என்றும் கூட ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது. தொழிலில் ஏதாவது பிரச்சனை மற்றும் வேலை கிடைக்காமல் இருப்பது திருமணம் ஆகாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் விலக திருவண்ணாமலை கோயிலுக்கு அமாவாசை அன்று கிரிவலம் வந்தால் இந்த துன்பங்கள் அனைத்தும் விலகும் என்று பெரியோர்கள் கூறுகிறார்கள்.