காலம் காலமாக நாம் கோவிலுக்கு சென்று வழிபடுவதும் தீபம் ஏற்றுவதும் இயல்பு அப்படி இருக்கும் பட்சத்தில் தீபத்தை சரியான நேரத்தில் சரியான முறையில் ஏற்றுவதன் மூலம் நமது குடும்பத்திற்கும் நமக்கும் நல்லது நடக்கும் என்று பெரியவர்கள் கூறுகின்றனர்…
அப்படி இருக்கும் பட்சத்தில் கோவிலில் வழிபடும் பொழுது சில விதிமுறைகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம், அப்படி நாம் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்கும் பட்சத்தில் நமது குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், பிறப்பு இறப்பு தீட்டுகளுடன் கோவில்களுக்கு செல்லக்கூடாது, சோம்பலுடன் இருப்பது தலைசிற்க்கு மற்றும் தலைவிரி கோலத்தோடு கோவிலுக்கு செல்லவே கூடாது, நமது வேண்டுதல்களை நினைத்து ஒரு மண்டலம் 48 நாட்கள் கோவில் சென்று விளக்கேற்றி வருவதன் மூலம் நம்மைச் சுற்றி இருக்கும் தீய சக்திகள் விலகி நல்லது நடக்கும், நாம் நினைத்தது அப்படியே நடக்கும், மேலும் இறைவனின் அருள் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் ஆலயத்தில் குப்புற விழுந்தபடி இறைவனை வணங்க வேண்டும் மேலும் கோவிலில் வெளியில் உள்ள யாசகர்களுக்கு யாசகம் தருவதன் மூலம் நமது குடி பெருகும்..!!