
இந்தியாவில் மிக பழமையான கோவில்களில் ஒன்று, திருச்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாத ஸ்வாமி திருக்கோவில். இக்கோவில் பழமையான கட்டிட கலைக்கு சிறப்பான முன்னுதாரணமாகும். எதிர்பாராத விதமாக நேற்று(ஆகஸ்ட் 4) கோயிலில் கிழக்கு கோபுரம் முதல் நிலையில் உள்ள சுவர் இடிந்து விழுந்தது.
நள்ளிரவு 1.50 மணிக்கு சுவர் இடிந்து விழுந்ததால் பெரிய அளவில் சேதம் தவிர்க்கப்பட்டது. கிழக்கு வாசலில் நுழைவு கோபுரத்தின் முதல் நிலை மற்றும் 2வது நிலை சுவர்கள், சில தினங்களாக விரிசல் ஏற்பட்டு இருந்தன. விரிசல் அதிகமான நிலையில் முதல் நிலை கோபுரத்தின் சுவர், மளமளவென இடிந்து விழுந்தது. நள்ளிரவில் சுவர் இடிந்து விழுந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.