கோவைக்காயை வைத்து பக்கோடா செய்து இருக்கிறீர்களா..!! அசத்தலான செய்முறை இதோ..!!

இந்த விடுமுறை காலங்களில் குழந்தைகளுக்கு தின்ப்பண்டம் என்றாலே மிகவும் பிடிக்கும். அதிலும் சத்தான தின்பண்டங்களை நாம் குழந்தைகளுக்கு கொடுக்க ஆசைப்படுவோம். அந்த வகையில் கோவைக்காய் பக்கோடா எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம். இதை சாப்பிட்டால் சொரியாசிஸ் தேமல் படை சிரங்கு சர்க்கரை நோய் பல் சார்ந்த பிரச்சினைகள் சிறுநீரக பிரச்சனைகள் தோல் நோய்கள் குணமாகும்.

தேவையான பொருட்கள்: 

கோவைக்காய் – 1 கிலோ,

வெங்காயம் – 2,

சோம்பு – 1/2 கரண்டி,

கடலை மாவு – 4 கரண்டி,

அரிசி மாவு – 2 கரண்டி,

பச்சை மிளகாய் – 2,

மிளகாய்த்தூள் – 2 கரண்டி,

குழம்பு மிளகாய்தூள் – 1 கரண்டி,

கறிவேப்பிலை – கைப்பிடி அளவு,

எண்ணெய் & உப்பு – தேவையான அளவு.

செய்முறை: 

முதலில் கோவைக்காய் வெங்காயத்தை சுத்தம் செய்து நீலவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் கோவைக்காய் வெங்காயம் சோம்பு, கடலை மாவு அரிசி மாவு மிளகாய்த்தூள் பச்சை மிளகாய் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். தண்ணீர் ஊற்றாமல் கலக்க வேண்டும்.

உங்களுக்கு தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றலாம். அடுப்பை பற்ற வைத்து கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இந்த கோவைக்காய் கலவையை போட்டு வறுத்தெடுக்கவும். அவ்வளவுதான் சுவையான கோவைக்காய் பக்கோடா தயார்.

Read Previous

கருவேப்பிலை பூண்டு தொக்கு செய்வது எப்படி?.. முழு செய்முறை விளக்கம் உள்ளே..!!

Read Next

பருப்புப் பொடி ரெசிபி இப்படி செய்து பாருங்க..!! முழு செய்முறை உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular