“கோவையில் சிறையில் என்னை கொல்லப்போறாங்க..!!” – செய்தியாளர்களிடம் சவுக்கு சங்கர் அதிர்ச்சி தகவல்..!!

தமிழ்நாட்டில் அரசியல் குறித்த பல்வேறு கருத்துகளை முன்வைத்து பல்வேறு youtube சேனல்களுக்கு பேட்டியளித்து பிரபலமானவர்தான் சவுக்கு சங்கர். இவர் சொந்தமாக youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றார்.

சமீபத்தில் தமிழக காவல்துறை அதிகாரி மற்றும் பெண் காவலர்கள் குறித்து சர்ச்சை கூறிய வகையில் பேசி வீடியோ பகிர்ந்து இருந்தார்.  இதனால் அவர் தேனியில் வைத்து கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து கோவைக்கு அவரை அழைத்து வரும் வழியில் விபத்து ஏற்பட்டது. அவரின் கைகளும் காயமடைந்தது. தொடர்ந்து காவல்துறையினர் தன்னை சிறையில் வைத்து தாக்குவதாகவும் விசாரணை என்ற பெயரில் கொடுமை செய்வதாகவும் சவுக்கு சங்கர் தரப்பு கூறி வந்தது. அவரின் ஆதரவு வழக்கறிஞரும் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கருத்துக்களை வைத்து வருகிறார்.

அவதூறாக பேசுதல், கஞ்சா கடத்தல்,குண்டார் என அடுத்தடுத்து பல்வேறு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று கோவை நீதிமன்றத்தில் காவல்துறையினரால் ஆஜர் படுத்தப்பட்ட சவுக்கு சங்கர் செய்தியாளர்களை சந்தித்து “கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன்” என கூறி சென்றார். இதனால் அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது.

Read Previous

அண்ணாமலை மீது ஆளுநர் வழக்குப்பதிவு செய்ய அனுமதி கொடுத்தாக கூறப்பட்ட விவகாரம்..!! ஆளுநர் மளிகை விளக்கம்.!!

Read Next

பட்டப்பகலில் காதலி கண்முன்னே துள்ளத்துடிக்க இளைஞருக்கு கொடூரம்..!! சென்னையில் பயங்கரம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular