கோவையில் சோகம்..!! வீட்டு ப்ரோக்கர் விஷம் அருந்தி தற்கொலை..!! காரணம் இதுவா..? முழு விவரம் உள்ளே..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடன் தொல்லை தாங்காது வீட்டு புரோக்கர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரத்தினபுரி சுப்பாத்தாள் லே-அவுட் பகுதியில் வசித்து வந்தவர் கிரிஷ்குமார் (வயது 51). அவர் வீடு பார்த்துக் கொடுக்கும் தரகர் வீட்டு தரகர் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லூர்து மேரி கருத்து வேறுபாட்டின் காரணமாக இவர்களுக்கிடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டது. இதனால் இருவரும் கடந்த எட்டு ஆண்டுகளாக பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கிரிஷ்குமாருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் ஒரு பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இருவரும் சேர்ந்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கிரிஷ்குமாருக்கு கடன் தொல்லை அதிகம் இருந்தது. அதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டார். இந்நிலையில் அண்மையில் அவர் திடீரென விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்பொழுது அவரது செல்போனை சோதனை செய்து பார்த்ததில் அதில் அவர் “எனது சாவிற்கு யாரும் காரணம் இல்லை. கடன் தொல்லை காரணத்தால் இப்படி ஒரு முடிவை நான் எடுத்துள்ளேன்”, என்று பேசிய வீடியோ பதிவை இருந்தது, இதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர், கடன் தொல்லை தாங்காமல் ஒருவர் விஷம் குடித்து உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read Previous

மீண்டும் மீண்டும் தொடரும் நாய்களின் அட்டூழியம்..!! 12 வயது சிறுவனை கடித்துக் கொதரைய நாய்..!!

Read Next

கலைஞர் கருணாநிதி இருந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்குமா..? நடிகர் பிரகாஷ்ராஜ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular