கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் உள்ள சேலையார் அன்ணையருகே இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் உள்ள சேலையார் அணை அருகில் ராஜேஸ்வரி (57) மற்றும் அவரது பேத்தி தனிபிரியா (15) இருவரும் தூங்கிக் கொண்டிருந்த வேளையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு இருவரும் உயிர் இழந்துந்துள்ளார்.
மேலும் இதே போன்று பொள்ளாச்சி திப்பம்பட்டி பகுதியில் ஒரு வீட்டின் மீது நிலச்சரிவு ஏற்பட்டதில் ஹரிஹரசுதன் (21) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார், மேலும் மேலும் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தும் அவர்களுக்கு தலா 3 லட்சம் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்